தமிழக வெற்றிக் கழகம் (TVK) உள்ளிட்ட அனைத்துப் பெரிய கட்சிகளும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் (ராமதாஸ் அணி) கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகச் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ இரா. அருள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் டாக்டர் ராமதாஸிடமே உள்ளது என்றும், அவரது அழைப்பின் பேரிலேயே நிர்வாகிகள் தைலாபுரம் சென்றுள்ளதாகவும் அருள் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாமகவுடன் இணைய விரும்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு தவெக-வுடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.