உத்தரப்பிரதேசம், வாரணாசியின் லால்பூர் பாண்டேபூர் பகுதியில், ஒரு நபர் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கம்பால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பெண், அம்மா! என்று கதறியவாறு வீட்டை விட்டு ஓடிச் சாலையில் தஞ்சமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
In #Varanasi‘s Lalpur Pandeypur area, a goon barged into a house, brutally beat a young woman until she fled screaming “Maa! Maa!” on the road, and threatened her mother: “Marry me or face the consequences.” pic.twitter.com/h9cxTCeXy1
— Siraj Noorani (@sirajnoorani) November 9, 2025
அந்தத் தாக்குதல் நடத்திய நபர், அப்பெண்ணைத் துரத்திக்கொண்டே, “என்னைத் திருமணம் செய்துகொள், இல்லையென்றால் விளைவுகளைச் சந்திப்பாய்!” என்று அச்சுறுத்தியுள்ளார். தாக்குதலைத் தடுக்க முயன்ற அக்கம் பக்கத்தினரையும் அவர் மிரட்டி விரட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அந்த நபர் பெண்ணை மீண்டும் மீண்டும் கம்பால் தாக்கும் காட்சியும், அக்கம்பக்கத்தினரை அச்சுறுத்தும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
