காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனித நீர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிந்த பிறகு புனித தீர்த்த குடங்கள் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் தேவ்ஜி, மாநில துணைத்தலைவர் நடராஜன் ஆகியோரிடம் அயோத்திக்கு எடுத்து செல்வதற்காக ஒப்படைக்கபட்டது.