செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான்,  எல்லாருக்கும் வணக்கம் ஐயா… மிகவும் முக்கியமான விஷயம்…. தமிழகம் வஞ்சிக்கப்படுவது…. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்ற  கட்டத்தில் இந்தியா முழுமைக்குமான ஒரு நடிகனாகவும், இரு  அரசியல்வாதியாகவும் மற்ற  நடிகர் இல்லாத மாதிரி… நான் குரல் கொடுக்க போராட வேண்டிய சூழ்நிலையில் நாம இருக்கிறோம். ஒட்டு மொத்த இந்தியாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் .

அதன் அடிப்படையில் அந்தந்த மக்களுக்கு அனைத்து துறைகளிலும்… தேர்தல் கமிஷன், பேங்க், . நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை எந்தெந்த விகிதாச்சாரங்களின் அடிப்படையில் மக்கள் இருக்கிறார்களோ…  பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இருக்கிறவங்க அதிக நாட்கள் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு விஆர்எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ரொம்ப முக்கியமானது… இது தான்   கிளீன் இந்தியா..  இதான் சுத்திகரிக்கப்பட்ட இந்தியா.

உண்மையான இந்தியா உருவாக வேண்டும் என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு  தான் தலையாய கோரிக்கை. தமிழகத்தில் சமூக நீதி காத்த  தமிழகம் என்று சொல்வதற்கு முன்னாடி…. பீகார்ல நித்திஷ் குமார் என்பவர் நிறைவேற்றி விட்டார்கள். இப்போ ஒன்றும்  கெட்டுப் போகவில்லை….  வெறும் 300 கோடி ரூபாய் இருந்தால் போதும் 3000ஆசிரியர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சம்பளத்தை கொடுத்து ஒன்றை மாதத்தில்.. நாளைக்கே ஆரம்பித்தாள் தமிழ்நாட்டில் இதை நிறைவேற்றலாம், இது என்னுடைய தலையாய வேண்டுகோள்….  முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து மக்களின் சார்பாகவும், உங்களுடன் சார்பாகவும், தமிழ் தேசிய புலி இயக்கத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்என தெரிவித்தார்.