செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் ,   குஷ்பூ சொல்லும் விளக்கத்தை ஏற்க முடியாததற்கு தான் இந்த கண்டனத்தை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்.  திரு. மன்சூர் அலி கான் தாக்கப்படுகிறார்.  ரஜினியினுடைய  ஜெயிலர் படத்தில் வெற்றி விழாவில் தமன்னாவை குறிப்பிட்டு அவரிடம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னார்….

அதற்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சியில் ராதாரவி கூட எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால்… நான் ஐஸ்வர்யாராய்வுடன்  என பேசி இருந்தார். அதேபோன்ற வகையில் தான் சினிமாக்காரரின் பேச்சில் மன்சூர் அலிகனையும் பார்க்க வேண்டும். ரஜினி அவர்களின் பேச்சை வேறு மாதிரியும்,  சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் என்பதற்காக  மன்சூர் அலி கானை பாஜக போன்ற அமைப்புகள் கார்னர் செய்வதாக தான் இதை கருத வேண்டும்.

இதற்காக பட்டியலின சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் குஷ்பு பேசி இருப்பதை குஷ்பூ பூசி மொழுகுகின்றார்கள். பிரஞ்சு மொழியை எல்லாம் தமிழ்நாட்டில் பேசுகிறார்கள்… தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்…. தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்… அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என தெரிவித்தார்.