ஒருவர் சமூக வலைதளங்களில் ஊட்டச்சத்து குறைபாடு தமிழகத்தில் அதிகம் ஏற்படுகிறது எனவும், தமிழகத்தில் 1 வருடத்தில் 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்து விடுவதாகவும் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் என தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கை, தமிழ்நாட்டில் 1 வருடத்திற்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக கூறிய தகவல் முற்றிலும் தவறானது.
தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 2022-ல் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 10.4 சதவீதம் இருந்தது. 2022- 2023 இறப்பு விகிதம் 10.2 ஆக குறைந்து காணப்பட்டது. 2023- 2024ஆம் ஆண்டு 8.27 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டுமே தமிழகத்தில் 4,89,838 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் 3,838 குழந்தைகளே இறந்துள்ளனர். இந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.8% குறைந்து காணப்படுகிறது இவ்வாறு சுகாதாரத்துறை அந்த நபர் அளித்த தகவலை முற்றிலும் மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது