திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 9:00 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த மணி முருகன், மாரியம்மாள் சுருளி, சுப்புலட்சுமி, ராஜசேகர், கோபிகா ஆகியோருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், லேசான காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. என செய்தி குறிப்பில் வெளியிட்டிருந்தார்.