உத்தரப்பிரதேசம் மெயின்புரியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அசுத்தமான தண்ணீரை குடித்த 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மெயின்புரியிலுள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியதாவது,  பிப்,.9 முதல் அரசு பொறியியல் கல்லூரியில் குறைந்தது 21 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இப்போது 7 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். கல்லூரியின் வாட்டர் கூலரிலிருந்து தண்ணீர் குடித்ததால் மாணவர்களின் நிலையானது மோசமடைந்தது. உணவு மற்றும் பாதுகாப்புத்துறை குழுவினர் கல்லூரிக்கு வந்து அசுத்தமான நீரின் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதோடு மாணவர்கள் குடித்த தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.