பெங்களூரு அனேகலில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று, தன் பள்ளியல் யுகேஜி படிக்கும் குழந்தையை ஃபெயில் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஒரு குழந்தைக்காக தங்களது நடைமுறையை மாற்ற இயலாது என பள்ளி நிர்வாகம் கூறிவிட்டதாக தந்தை மனோஜ் பாதல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது “குழந்தையை பெயிலாக்குவதன் வாயிலாக வருங்காலத்தில் கல்வியில் உரிய முறையில் ஆர்வம் செலுத்தி படிக்க வழி பிறக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் தன் குழந்தை இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் எனவும் இந்த சிக்கலை புரிந்துகொள்ளவே முடியாது எனவும் தந்தை கவலை தெரிவிக்கிறார். இதற்கிடையில் தகவல் பரவிய நிலையில், கல்வித்துறை சார்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.