மகாராஷ்டிரா மாநிலம் உள்ள தனியார் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த உணவை உட்கொண்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. இதனால் 45 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, குழந்தைகள் உட்கொண்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஆகியுள்ளது என்று கூறியுள்ளனர்.

அதோடு தற்போது குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதலில் ஐந்து குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் காலப்போக்கில் எண்ணிக்கை அதிகரித்தது.