தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி, விக்ரம், மாஸ்டர் மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் அடுத்ததாக ரஜினியின் 171-வது திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் கோலிவுட் ஸ்டைலில் அவருக்கென எல்யூசி என சினிமாடிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்யூசி கான்செப்டில் வரும் நிலையில் அடுத்ததாக இதே கான்செப்டில் கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க இருக்கிறார். இந்த கதைகளின் ஆரம்ப கட்டத்தை கூறுவதற்காக தற்போது லோகேஷ் கனகராஜ் ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த குறும்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.