பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் திவ்யங்கா திரிபாதி. இவர் சீரியல்களிலும் நடித்து ‌ வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தசைநார் கிழிவு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்தார். அதன்பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் திடீரென எதிர்பாராத விதமாக தற்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இந்த விபத்தில் அவருடைய 2 கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை திவ்யங்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அவருடைய கணவர் விவேக் தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் என்னுடைய மனைவி விரைவில் குணமாகி நலம் பெற உங்களுடைய அனைவரின் பிரார்த்தனையும் வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.