லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். சினிமாவில் தனக்கென்று என்றும் அழியாத ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகிறார். 10 கோடிக்கு மேல் சம்பளம் தரும் நடிகையாக வலம் வரும் இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வாடகை தாய் மூலமாக இரண்டு மகன்களை பெற்றெடுத்தார் . இந்த நிலையில் அவர் தன்னுடைய மகன்களை ஆட்டோ ரைட் கூட்டி சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு வைத்துள்ளார். இது குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.