தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு கில்லி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்த நிலையில், திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் கில்லி படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கில்லி படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தைக்காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்தனர். மேலும் இதனால் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.