
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் பேசும்போது,
இன்று நடைபெறும் பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் உடைய அறிவிப்பு கூட்டத்தினுடைய நாயகன், எங்களின் அன்பே… அறிவே…. ஆருயிரே…. அழகே… அற்புதமே… ஆற்றலே… சமத்துவமே… சாதனையே…. சரித்திரமே…. நாளைய வரலாற்று நாயகரே…. எங்களின் முதல்வரே….. நாளைய வருங்கால தமிழகத்தை ஆளுவதற்காக இன்று எங்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த மேடையிலே அமர வைத்திருக்கும் எங்கள் ஆற்றல் மிக்க தலைவர் அவர்களை வணங்கி இந்த உரையை துவங்கி, ஒரு சில சின்ன கருத்துக்களை மட்டும் உங்கள் முன் நான் பதிவிட ஆசைப்படுகின்றேன்.
இத்தனை ஆண்டு காலம் நாம் கட்சி துவங்கி 17 ஆண்டு காலம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த சூழலில், 1991 – 1996 வரை நடந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ஒருவர் இனிமே தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு, இமயமலை சென்று விட்டார். ஆனால் நம்முடைய தலைவர் அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக 234 தொகுதிகளிலும் இரவு 12, 1, 2 மணி வரை தேர்தல் பரப்புரை ஆற்றி, தமிழக ஆட்சி பீடத்தில் அமர வைத்த ஒப்பற்ற தலைவர்….. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் உட்கார வைத்த ஒப்பற்ற தலைவர் என பேசினார்.