வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

அமைச்சர் பொன்முடியின் மீது சொத்து குவிப்பு வழக்கு மீது ஏற்கனவே கீழமை நீதிமன்றம் அவர் விடுதலை செய்து உத்தரவு கொடுத்துள்ளது. அதன் மீது மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் இப்போது அவருக்கு சிறை தண்டனையும், அபதாரமும் வழங்கி இருக்கிறது. அதோடு மட்டுமல்ல உயர் நீதிமன்றமே அவர் மேல் முறையீடு செய்து தன்னுடைய வாதங்களை,  நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய முறையும் அவருடைய தண்டனையை  நிறுத்தி வைத்து ஒரு மாத காலம் அவருக்கு அவகாசம் வழங்குகிறது.

எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் நிச்சயமாக மேல்முறையீடு செய்து…  தன்னுடைய நியாயங்களை எடுத்து வைப்பார். எப்பவுமே நீதி ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற தண்டனை,  நீதிமன்ற தீர்ப்பு என்பது ஒரு கட்டத்தில் இருக்கிற ஒரு தீர்ப்பை மட்டும் வச்சுக்கிட்டு இறுதியான தீர்ப்பு என நாம் சொல்ல முடியாது. இறுதியான தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத்திற்கு போவதற்கு வாய்ப்பு இருக்கிற சூழ்நிலையில்….

உச்சநீதிமன்றம் இறுதியா என்ன சொல்லுது….  அப்படிங்கறத பொறுத்து தான் நாம முடிவுக்கு வர முடியும்.  எனவே அவர் மீது வழங்கப்பட்டுள்ள தண்டனை மீது  உச்சநீதிமன்றத்திற்கு போகட்டும்…..  உச்சநீதிமன்றம் என்ன சொல்லுதுன்னு பார்த்து…..  உச்சநீதிமன்றம் வழங்க இருக்கின்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நாம் இறுதியான முடிவுக்கு வர முடியும் என்பது தான் நான் சொல்ல விரும்புகிறேன் என் தெரிவித்தார்.