வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,   ஊழல் தடுப்பு காவல் துறை யார்கிட்ட இருக்கு. முதலமைச்சர் கிட்ட இருக்கு. ஒருவேளை முதலமைச்சர் இதை தவறாக செய்ய வேண்டும்….

இதை ஏதாவது காப்பாத்தணும்னு நினைச்சாருன்னா…. லஞ்ச ஒழிப்புத்துறை வித்ட்ராவே பண்ணி இருப்பாங்க….  வாபஸ் வாங்கி இருப்பாங்க….  அந்த அளவுக்கு கடந்த காலங்கள் எல்லாம் நடந்திருக்கு…  நிறைய வழக்குகள் முன் உதாரணம் சொல்ல முடியும்…. கடந்த காலங்களெல்லாம் வழக்குகளை வித்ரா பண்ணி இருக்காங்க….

இந்த வழக்கை விசாரிக்கணும்னு சொல்லிட்டு மிரட்டி இருக்கிறார்கள்…  விசாரிச்ச சாட்சிகளை மீண்டும் கொண்டு வந்து விசாரித்து இருக்கிறார்கள்…. இதெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கு….  ஆனால் இந்த அரசு மிகவும் நியாயமாக இந்த DVAC டைரக்டர் விஜிலென்ஸ்  ஆன்டி கரப்சன்ல  தலையிடாம….  சட்டம் தன் கடமையைச் செய்யும். அவர் இதை எதிர் கொள்ளட்டும் என விட்டு இருக்காங்க… அவரும் இதை எதிர் கொண்டுள்ளார்.

இப்போ உயர்நீதிமன்றதில் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். இவருக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய பக்கத்தில் என்னென்ன வாதங்களுக்கு…. என்ன நியாயங்கள் இருக்கு….. என்பதை எடுத்து வைப்பதற்கு வாய்ப்பு இருக்கு. அதனால் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு தான் இந்த வழக்கில் நிறைவாய் ஒரு முடிவுக்கு வர முடியும் என தெரிவித்தார்.