வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன்,  பாஜகவில் இணைந்தால் புனிதர் ஆகிவிடுவாரா ? என்று கேள்வி எழுப்பினீர்கள்…. அதற்கு திரு அண்ணாமலை பதில் சொன்னாரா ? நழுவி தானே போனாரு….

அதுதான் சொல்றேன் சாகன் புஜ்பால் ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆயிரம் கோடி ஊழல். ED அவர்களை அரெஸ்ட் பண்ணாங்க. அவர் அஜித் பவரோட கட்சியில் சேர்ந்துட்டாரு….. என்ன ஆச்சு ?  ED அவர் மேல இருக்கக்கூடிய வழக்கை வாபஸ் பண்ணிவிட்டார்கள் . அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கக்கூடிய ஊழலைப் பற்றி பேசக்கூடிய தைரியம் இருக்கா ? அண்ணாமலைக்கு…. இப்ப பேசினாரு…

ஆளுநர் ஊழல் வழக்குகளில் இருக்கக்கூடிய பையில இன்னும் கையெழுத்து போடாம வச்சிருக்காரே….  அதை பத்தி பேசக்கூடிய தைரியம் இருக்கா அண்ணாமலைக்கு ? இவர் ஏதோ ஊழலுக்கு எதிரான அரசியல்வாதிகள் சொல்லி சப்ப கட்டு கட்டிக் கொண்டிருக்கிறாரே….  ஆளுநர் கிட்ட ஐயா எல்லா ஊழலும் ஒரே ஊழல் தான்யா…. நீதிமன்றங்கள் விசாரிக்கட்டும்னு சொல்லக்கூடிய தைரியம் அண்ணாமலைக்கு இருக்கா ? இவர்களெல்லாம் எப்படி ஊழலை பற்றி பேச முடியும். ஊழலைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? என தெருவித்தார்.