சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  நாம ஜூடிசியல் பத்தி பேசிட்டு இருக்கோம். நீதித்துறையில் வந்திருக்கக்கூடிய தீர்ப்பு. அதனாலதான் நான் டைம் எடுத்து சொல்றேன்.  உங்க கேள்வியை இரண்டாக பிரித்துள்ளேன்.

நீதித்துறையின் உடைய சார்பு நிலைப்பாடு எப்படி இருக்கு ? பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்து இருக்கிறதா ? ஆளுங்கட்சியை சார்ந்து இருக்கிறதா ? ஆளுங்கட்சியை சார்ந்து இல்லையா ? என உங்கள் கேள்வியிலே ஒரு பொருள் இருக்குது. அதற்காகத்தான் நான் நேரமெடுத்து வேற வேற காலகட்டத்தில் விளக்கம் கொடுக்கின்றேன்.

நீதித்துறைக்கும்,  ஆளுங்கட்சிக்கும் யாராவது ஒருத்தர் சம்பந்தப்படுத்தி பாக்கறாங்கன்னா….. அதுவும் உயர் நீதிமன்றம் –  உச்சநீதிமன்ற அளவில் சம்மந்தப்படுத்தி பாக்குறாங்கன்னா….  அவர்கள் அரசியல் பொறுப்பில் இருப்பதற்கு லாய்க்கு இல்லை என்று தான் நான் பார்க்கின்றேன். எதை வேணாலும் டிபன் பண்ணலாம்…. இதைப் போன்ற ஒரு ஜட்ஜ்மெண்ட்டை ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள்…..  நீதித்துறையில் களங்கம் ஏற்படுத்தி டிபன் பண்றாங்க என்றால், அதற்கு என்ன பதில் சொல்வது ? இரண்டாவது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு பணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவுக்கு அனைத்தையும் புரட்டி போடும் தீர்ப்பு

அவர் மீது இருக்கக்கூடிய வழக்கில்…. ஒரு ஏஜென்சியில் இருக்கலாம்…..  சிபிஐயில்  இருக்கலாம்… EDஇல் இருக்கலாம்… அதுபோல ஏஜென்சில் இருக்கக்கூடிய வழக்குகள் ஸ்லோவ் ஆகுதா ? இன்னைக்கு நீங்க பாருங்க…. பாரதிய ஜனதா கட்சியில் சேர்ராங்க…. திரும்பத் திரும்ப என்ன சொல்லுவாங்க ? என்றால் ஒரு 2 பேரை சொல்லுவாங்க….

குறிப்பாக மகாராஷ்டிராவில் அஜித் பவாரை  கொண்டு வருவாங்க… நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்…  யார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்கிறார்களோ அல்லது பாரதிய ஜனதா கட்சி இருக்கக்கூடிய அரசில் அவர்களும் ஒரு கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கின்றார்களோ…..  பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதுமே ஊழலுக்கு துணை போவது கிடையாது.

அப்படி இருக்கும் பொது பாஜகவின் கொள்கையே கிடையாது… ஊழல் வழக்கில் உள்ளவர்கள் எங்களோடு வந்தால் மட்டும் தான் ஒரு விமோசனம் கிடைக்கும் என்று சொல்ல மாட்டோம்.. இதையெல்லாம் அரசியல் லாபத்திற்காக அவர்கள்  மீது இருக்கக்கூடிய பிரச்சனையை மறைப்பதற்காக தொடர்ந்து வைக்கக்கூடிய குற்றசாட்டு என தெரிவித்தார்.