சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதற்காக சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் பட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராட்சத கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.