கரூர் மாவட்டத்தில் உள்ள புரவிபாளையம் கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார்m இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த உறவினர்கள் கவியரசு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் கவியரசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.