தலைவர் 171 திரைப்படம் குறித்த சில தகவல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் அவர்களை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக பல நேர்காணல்களில் கலந்து கொண்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

ஒவ்வொன்றிலும் லியோ படம்  குறித்து, தனது அடுத்த படம் குறித்தும் அவர் தெரிவித்து வர,  சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,  ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 171 வது திரைப்படம் இதுவரை நான் இயக்கிய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும்.  படத்தின் கதாபாத்திரங்களுக்கு  நான் நடிகர்களை தேர்வு செய்யும் விதமே,  மக்களை பெரிதும் கவரும்  விதமாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.  இது முழுக்க முழுக்க Stand Alone  திரைப்படம் தான்.  இதை LCU ற்குள்  கண்டிப்பாக கொண்டு வரப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.