உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அண்மையில் படக்குழு காஷ்மீருக்கு சென்றார்கள். மேலும் படக்குழுவினர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் விஜய், லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் இடம் பெற்றிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ கசிந்துள்ளது. இதனால் படக்குழு கடும் அப்செட்டில் இருக்கின்றார்களாம்.

இது குறித்து படக்குழு, படம் குறித்த போட்டோக்கள், வீடியோக்களை இணையத்தில் பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி பகிர்ந்தால் விதிமீறல் லிங்குகள் இல்லாமல் உடனடியாக நீக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். லியோ திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.