பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி காலமானார். கடந்த ஒரு வருடமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 150 படங்களில் நடித்துள்ள இவர், லகான், சக்தே இந்தியா, அந்தாஸ் அப்னா அப்னா, இஷ்க், சதக் 2 உட்பட பல திரைப்படங்கள் மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.