நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு என பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நான் படிக்கப் போகிறேன் என கூறிவிட்டு சென்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கடைசியாக இவர் ரெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் 5 வருடங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் புலிக்குட்டி திரைப்படத்தில் மீண்டும் நடித்தார்.

இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது. தற்போது யோகி பாபு உடன் சேர்ந்து மலை என்ற படத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சப்தம் என்ற திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிவழகன் இயக்கி தயாரிக்கின்றார். மேலும் படத்தில் ஹீரோவாக ஆதி நடிக்கின்றார். தமிழ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.