தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” என்னும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கி அட்லூரி, ஷரா என சிலர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் படம் வெளியான 8 நாட்களில் 75 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை சில மணி நேரங்களிலேயே தயாரிப்பு நிறுவனம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறது.