லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் மிஸ்கின் நேற்று முதல் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.