ஹிந்தி சினிமா உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் சென்ற சில படங்கள் சுமாரான வசூலை கூட பெற முடியாமல் திணறி வருகின்றது. மலையாளத்தில் ரிலீசான டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் செல்பி என்ற பெயரில் ரிலீசானது. இந்தியில் இத்திரைப்படத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹஸ்மி என பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி மோசமான வசூலை ஈட்டி இருக்கின்றது.

இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலாக இரண்டரை கோடி வரை தான் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து பாலிவுட் இன்னும் மீளவில்லை. அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவர் மீண்டு இருக்கின்றார். ஆகையால் ஹிந்தி சினிமா உலகினர் இனி கதையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.