நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு திரைப்படம் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் கதை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் அடுத்த திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக கொடுத்து தக்க பதிலடி தர வேண்டும் என தயாராகி வருகின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து படம் பண்ணலாம் என முடிவெடுத்து இருக்கின்றாராம். மேலும் இந்தப் படம் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி இருக்கின்றார் விக்னேஷ் சிவன். அவரும் படத்திற்கு கிரீன் சிக்னல் காட்டி விட்டாராம். இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதனை சந்தித்து விக்னேஷ் சிவன் கதை கூறியிருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. அந்த கதை அவருக்கும் பிடித்து அவரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். விஜய் சேதுபதி மற்றும் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடிப்பில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.