பெங்களூரில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நாகனாகவுடா, தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார்.
நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பால் வாங்கச் சென்றபோது, அந்த வழியாக வந்த பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.
இதில் பேருந்தின் அடியில் சிக்கிய இரண்டு மற்றும் நான்கு வயதுடைய அந்த இரு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்தில் லேசான காயமடைந்த நாகனாகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மாரப்பாவை ஹென்னூர் போக்குவரத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர் ஏற்கனவே ஒரு ஆட்டோவின் மீது மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிக்க அதிவேகமாக பேருந்தை ஓட்டி வந்தபோதுதான் இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.
