பெங்களூரை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் மற்றும் அவரது மனைவி ஷியாமளா ஆகியோரை, அவர்களது மகன் ரோகன் சந்திர பட் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு திரும்பிய ரோகன், பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காகத் தனது பெற்றோரிடம் பெரும் தொகையை முதலீடாகக் கேட்டு வந்துள்ளார். ஆனால், அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று பெற்றோர் மறுத்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த மோதல் காரணமாக ரோகன் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று காலை தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று மீண்டும் பணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த ரோகன், தனது தாய் மற்றும் தந்தையை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
அண்டை வீட்டார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரோகன் சந்திர பட்டை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
