​ஊர் மக்களின் வீணான கேலிப் பேச்சைக் கேட்டு, ஒரு தந்தை தனது ஒரு வயதுப் பிஞ்சு மகனைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தானா கிராமத்தைச் சேர்ந்த சோம்பால் என்பவன், ராஜஸ்தானில் வேலை பார்த்து வந்துள்ளான். அவனது மனைவி ராஜ்பேட்டிக்கு ஒரு வருடம் முன்பு ‘வருண்’ என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

​ராஜஸ்தானில் இருக்கும் சோம்பாலை போனில் தொடர்பு கொண்ட கிராமத்தினர் சிலர், “நீ அங்கேயே இருக்கிறாய், உன் மனைவிக்கு இங்கே குழந்தை பிறந்திருக்கிறது. செம கில்லாடி நீ!” என்று கிண்டல் செய்துள்ளனர். இந்த நச்சு வார்த்தைகள் சோம்பாலின் மனதில் சந்தேகத் தீயை மூட்டியுள்ளன. குழந்தை தன் ஜாடையில் இல்லை என்று மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்ட சோம்பால், இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ராஜஸ்தானில் இருந்து வந்து, மனைவியின் மடியில் இருந்த குழந்தையைப் பறித்துக் கொண்டு ஓடியுள்ளான்.

​யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒரு வயதுக் குழந்தை வருணின் கழுத்தை மூன்று இடங்களில் எலும்பு உடையுமளவுக்கு நெரித்துக் கொன்று, பிணத்தைத் குளத்தில் வீசியுள்ளான். தகவலறிந்து வந்த போலீஸார், குழந்தையைக் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பி ஓட முயன்ற சோம்பாலை கைது செய்தனர். “ஊர் வாய்க்குப் பயந்து பெற்ற மகனையே கொன்ற இந்த அரக்கன்” தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனைத் தூண்டிவிட்ட அந்த “விஷம” கிராமத்தினர் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.