குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 10 முதல் 15 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2011- 2021 வரை குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2021-ல் பதிவாகிய குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளில் 51.2% தமிழகத்தில் பதியப்பட்டவை ஆகும்.
இதற்கிடையில் தெரிந்தே காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் தொடர்பான தகவலறியும் உரிமைச் சட்ட(ஆர்டிஐ) கேள்வியில் இதுகுறித்த விபரம் வெளியாகி உள்ளது.