பிளிப்கார்டு இப்போது பிக் சேவிங் டே ஆஃபரை அறிவித்திருக்கிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களை சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், ஏசிகள் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அந்த வகையில் Samsung Convertible 5 in 1 Cooling 2023 1.5 Ton Split மாடலை பிளிப்கார்டில் 41 சதவீதம் தள்ளுபடியில் வாங்கிக்கொள்ளலாம். இந்த AC-ஐ ரூ.60,999-க்கு பதில் வெறும் ரூ.35,500-க்கு பிளிப்கார்டு வழங்குகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூபாய்.4,500 தள்ளுபடியையும் சேர்த்து பெறலாம். இந்த AC 977.8W மின் நுகர்வுடையது. 111-150 சதுர அடி வரையிலான அறைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

LG Convertible 6-in-1 கூலிங் மாடல் 1.5 டன் AC 4 ஸ்டார் மதிப்பீட்டில் வரும். இவற்றில் ஸ்பிலிட் டூயல் இன்வெர்ட்டர் 4 வே ஸ்விங், எச்டி பில்டருடன் வருகிறது. 51 சதவீத தள்ளுபடி கொண்ட இந்த AC-ஐ வாடிக்கையாளர்கள் ரூ.81,889க்கு பதில் வெறும் ரூ.39,990க்கு வாங்கிக்கொள்ளலாம்.

அதேபோல் MarQ by Flipkart 2023 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் AC-ன் டர்போ கூல் தொழில்நுட்பத்துடன் வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு 45 சதவீத தள்ளுபடியுடன் இந்த AC வழங்கப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் ரூ.52,999-க்கு பதில் ரூ.28,999-க்கு ஏசியை பெறலாம். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் இந்த AC-க்கு ரூ.4,500 தள்ளுபடி இருக்கிறது. இது 1620W மின்நுகர் திறனுடையது. 1 வருட பிராடக்ட் உத்தரவாதம் மற்றும் 10 ஆண்டு கம்ப்ரசர் உத்தரவாதம் இருக்கிறது.