தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு காலை முதல் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள twitter பதிவில் 70-வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் தற்போது ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.