தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விஷயம் சொன்னாங்க. அண்ணாமலை அண்ணா வந்து ஒரு வாட்ச் கட்டி இருக்காரு. அந்த வாட்சுக்கு  பில் கொடுக்கணும். ஆமா..!  நான்  பில் கொடுக்கிறேன், அதற்கான தேதி நேரமெல்லாம் குறிப்பிட்டு விட்டேன்.

இந்த வாட்ச் எங்கிருந்து வாங்குன ? எவ்வளவு பணம் கொடுத்தேன் ? எல்லாம் ஆதாரத்தோடு கொடுக்கிறேன். இது ரொம்ப வித்தியாசம். நீங்க பார்த்தீங்கன்னா…. இதுவரை இந்தியாவில் கேள்வி யாரை கேட்பார்கள் என்றால் ? மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து தான் இத்தனை நாளா நாம கேள்வி கேட்டிருக்கோம். நீ எம்எல்ஏ, நீ எம்பி, நீ முதலமைச்சர், நீங்க பிரதமர், நீங்க அமைச்சர், மக்கள் பணத்தில் மாத மாதம் உங்களுக்கு சம்பளம் வருது.

நீங்கள் அதை சரியாக பயன்படுத்தினீர்களா?  எங்களுக்கு ஆதாரம் கொடு அப்படின்னு கேட்போம். ஆனால் இந்திய வரலாற்றில் 1947 சுதந்திரத்திற்கு பிறகு…  75 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரம் வாங்கிய இந்திய வரலாற்றை பார்க்கிறோம்.  முதல் முறையாக ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக, ஒரு சாமானிய மனிதனைப் பார்த்து நீ பில் கொடு என கேட்குறாங்க, இது ஆச்சரியம்.

இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் கவுன்சிலர் கிடையாது,  பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது,  எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில் தொண்டராக ஒரு பொறுப்பில் வேலை பார்க்கின்றேன். அப்ப நான் ஆச்சரியமாக ஒருத்தரிடம் கேட்டேன். என்னங்க இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு…  நாங்க தானே எப்பவும் கேள்வி கேட்போம். இப்ப நீங்க கேக்குறீங்கன்னு ?  அந்த அளவுக்கு எங்களுக்கு மமதை வந்திருக்கிறது என தெரிவித்தார்.