திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் பேருந்து புறப்பட்ட நிலையில் இன்று காலை விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை சேத்பட் பகுதியில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட அந்த பேருந்து சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பு.முட்லூர் வெள்ளாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்தில் சிக்கியது.

மேலும் இந்த விபத்தில் 18 பக்தர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.