தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
