வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.

நேற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இன்றும் விடாது மழை பெய்வதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் நாகை மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.