குழந்தைகளுடன் விளையாடுவது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், வைரல் வீடியோ ஒன்றில் ஒரு சுட்டி குழந்தை செய்த காரியம் இப்போது நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. வீடியோவில், ஒரு நபர் ஆசையாக ஒரு குழந்தையைத் தனது மடியில் வைத்து கொஞ்சுகிறார்.

குழந்தைக்கு ஒரு ‘கிஸ்’ கொடுக்கலாம் என அவர் முகத்தை அருகில் கொண்டு சென்ற அந்த நொடி, அந்தச் சிறுவன் செய்த காரியம் தான் ஹைலைட்! அந்த நபர் முத்தம் கொடுக்க முயன்ற அடுத்த வினாடியே, குழந்தை மின்னல் வேகத்தில் அவர் மீது ஒரு ‘பயங்கரமான’  தாக்குதலைத் தொடுத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Parenting Heart (@parenting__heart0)

குழந்தையின் இந்தத் திடீர் எதிர்தாக்குதலை எதிர்பார்க்காத அந்த நபர், ஒரு நிமிடம் அப்படியே நிலைகுலைந்து போனார். ‘parenting__heart0’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

“இந்தக் காலத்து குழந்தைகள் ரொம்ப உஷார்ப்பா.. அவங்களுக்குப் பிடிக்கலைனா டக்குனு சொல்லிடுறாங்க” என வீடியோவைப் பார்த்தவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.