குழந்தைகளின் குறும்புத்தனத்திற்கு அளவே கிடையாது என்பதற்குச் சான்றாக ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் “கலக்கி” வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குட்டிப் பெண் பாலுக்காக வீட்டின் பிரிட்ஜைத் திறக்கிறார்.
வழக்கமாகப் பெரியவர்கள் எடுத்துத் தரும் வரை காத்திருக்காமல், தானே ஒரு “சூப்பர் ஐடியா” செய்துள்ளார். பிரிட்ஜில் இருந்த பால் பாக்கெட்டை கையில் எடுத்த அந்த வாண்டு, அதை அப்படியே பிரித்து குடிக்க முயற்சி செய்கிறார்.
View this post on Instagram
அந்தக் குழந்தை பால் குடிக்கப் பயன்படுத்திய அந்த “டெக்னிக்” மற்றும் முகம் பாவனைகளைப் பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சொக்கிப் போயுள்ளனர்.
“சின்னக் குழந்தையா இருந்தாலும் அறிவு ஜாஸ்திப்பா!” என இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். ஷிரிதி ரோகித் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது வைரல் லிஸ்டில் டாப் இடத்தில் உள்ளது.
