காட்டின் ராஜாவாக இருந்தாலும், தண்ணீருக்குள் முதலைதான் ‘தெய்வம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகீர் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆப்பிரிக்கக் காட்டில் தாகம் தணிப்பதற்காக சிறுத்தை ஒன்று ஆற்றின் கரைக்கு மிகவும் எச்சரிக்கையுடன் வந்து தண்ணீர் குடிக்கிறது.
मौत और प्यास के बीच सिर्फ एक सेकंड का फासला।
अफ्रीका के जंगलों में पानी पीना किसी जंग जीतने से कम नहीं है।
यहाँ मगरमच्छ 24 घंटे शिकार की ताक में बैठे रहते हैं। एक छोटी सी चूक और सब खत्म।
Survival of the fittest. pic.twitter.com/kjDOoqjAQt
— Shagufta khan (@Digital_khan01) February 11, 2026
சிறுத்தைக்கு ஏதோ ஆபத்து வரப்போவது முன்னமே தெரிந்திருந்தாலும், அது சுதாரிப்பதற்குள் தண்ணீருக்குள் பதுங்கியிருந்த ஒரு ராட்சத முதலை ‘ஜஸ்ட்’ ஒரு செகண்டில் பாய்ந்து அதன் கழுத்தைப் பிடித்து ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது.
நிலத்தில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தையால்கூட முதலையின் அந்த அசுர வேகத்திற்கு முன்னால் தப்பிக்க முடியவில்லை. “காட்டில் தண்ணீர் குடிப்பது என்பது போர்க்களத்தில் போர் புரிவதற்குச் சமம்” என இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயற்கை எவ்வளவு அழகானது என்பதை விட, எவ்வளவு கொடூரமானது என்பதையும் இந்த 12 வினாடி வீடியோ கண் முன்னே நிறுத்தியுள்ளது.
