அதிபராக நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல்நலம் மற்றும் துடிப்புடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளிடையே அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கான வாதங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

குடியரசு கட்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே இறங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல் நலம் மற்றும் துடிப்புடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.