இலங்கையை போலவே பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலையும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் 9,000 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த நிலையில் இலங்கையை போல பாகிஸ்தானின் பொருளாதாரமும் சீர்குலையும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்குவதும் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதும் பாகிஸ்தான் அரசின் நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்றும் இது இலங்கையை போல பொருளாதார சீர்குலையை ஏற்படுத்தும் எனக் கூறினார். மேலும் தலைவலி மாத்திரையால் புற்றுநோயை குணப்படுத்த முயல்கிறது எனவும் கிண்டல் அடித்தார்.