துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட 276 மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துருக்கியில் கடந்த ஆறாம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்த நாட்டை நிலைகுடைய வைத்துள்ளது. இதனை ஒட்டி உள்ள சிரியாவும் பாதிப்புக்குள்ளானது. இந்த இரு நாடுகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாக்கப்பட்டன.

இழிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நீடித்து வரும் நிலையில் 12 நாட்களுக்குப் பிறகு இழிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 45 வயது உடைய ஒருவர் மீட்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் மீட்ப படையினர் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் ஏற்கனவே 15 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.