சீன பொருளாதாரத்தை புதுப்பித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சீன பொருளாதாரத்தை புதுப்பித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் வேதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசு துறைகளில் அதிகரித்து வரும் கடன் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடிகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சீனாவின் பொருளாதாரத்தை புதுப்பிக்க மக்களின் எதிர்பார்ப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.