இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வின் முதல் அமர்வு ஜனவரி மாதம் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்வின் இரண்டாம் அமர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ஆம் தேதி வரை இரவு 9 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்ற விண்ணப்பிக்கலாம்.