நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சானிட்டரி  நாப்கின் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. டெல்லி அரசாங்கம் பிரதான் மந்திரி பாரதிய ஜனுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகளுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுபிதா சாரதி என்னும் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து வரும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மாதம் தோறும் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பள்ளிகள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சானிட்டரி நாப்கின் வழங்குவதற்கு 200 மாணவிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.