இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் ஆன்லைன் முறையில் உணவு விநியோகம் செய்து வருகிறது. இந்த சேவையை www.catering.irctc.co.in மற்றும் Food on Track  என்ற செயலி மூலமாக பயணிகள் பெறலாம். அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் கம்யூனிகேஷன் மூலம் இ கேட்டரிங் சேவைகளை இரண்டு நிலைகளில் செயல்படுத்தி வருகின்றது.

அதில் வாடிக்கையாளர் தங்களது தேவையான உணவுகளை தேர்வு செய்து ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக வாடிக்கையாளுடன் நேரடியாக உரையாடுவதற்கு whatsapp எண் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய AI பவர் சாட்போட் அனுப்பப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் உணவுப் பொருட்களை முன்பதிவு செய்யும். இந்த திட்டம் தற்போது சில ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ள நிலையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.