மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றார். திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் அல்ஜியா.

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றும் உடைய அணிந்து அவரை போல நடந்து வந்தும் மக்களுக்கு கை அசைவது போன்றும் நாளிதழ் படிப்பது போன்றும் காட்சிகளாக உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகிறது.